பாமக சிறப்பு பொதுக்குழுவில் நிறுவனர், தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என தீர்மானம்
பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நிறுவனர் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 4,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்ற அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதிக்கு பதவி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாமக எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸூக்கே முழு அதிகாரம், உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை அமைக்கப்படும், அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக செயல்படுவார் என தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


