வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கவில்லையெனில் போராட்டம் வெடிக்கும்- ராமதாஸ்

 
பி, சி பிரிவு பணிகளுக்கு வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்துக - ராமதாஸ் வலியுறுத்தல்..   பி, சி பிரிவு பணிகளுக்கு வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்துக - ராமதாஸ் வலியுறுத்தல்..  

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்கும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்மம் தான் காரணம்.. வன்னியர் இட ஒதுக்கீடு திமுக போடும் நாடகம் - ராமதாஸ் காட்டம்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "இந்த கூட்டம் வன்னியர் சங்கத்தின் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டம். 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் வன்னிய மக்களுக்காக தொடர்ந்து அவருடைய பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்திருக்கிறோம். வன்னிய மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க மாமல்லபுரம் மாநாட்டில் கூறியது போல கடுமையான போராட்டத்தை நடத்துவோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. சங்கம் என்றால் ஒற்றுமையாக இருப்பது, ஒன்று கூடுவது, உரிமைக்காக போராடுவது. வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காகவும், சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

வன்னியர் சங்கத்தின் கொள்கை என்ன என்பது குறித்து பேசுவதற்காகவும், கடுமையாக உழைக்க வேண்டும் என்பது குறித்தும் பேசுவதற்காக கூடியிருக்கிறோம்.தற்போதைக்கு கட்சிப் பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. தற்போது குறிப்பிட்ட சில ஊடகங்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். எப்போதும் போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு வருகிறது. 10. 5% இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசி தான் அறிவிப்போம்" என்றார்.