திடீரென தைலாபுரம் சென்ற அன்புமணி?... தனது ஸ்டைலில் பதிலளித்த ராமதாஸ்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாடு இடத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ் பார்வையிட்டார். அப்பொழுது வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராமதாசிடம் அன்புமணி தைலாபுரம் வீட்டிற்கு சென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவரது வீட்டிற்கு அவர் செல்கிறார் என பதில் அளித்தார். பா.ம.க எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத வெற்றி பெரும், ஏனென்றால் அப்படிபட்ட பலமான கூட்டணி என்றார். கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தீற்களா என்ற கேள்விக்கு, இனிமேல் சரியாக முறையாக உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும், உங்கள் சந்தேகங்கள் போக்கப்டும் என்றார். பாமக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான வெற்றி பெறும் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை விதியை எடுத்து கல்லூரி கட்டுவதை எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு, கோவில்களுக்கு சொந்தமாக நிலங்களோ பணமோ அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது தவறில்லை என தெரிவித்தார். மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுப்பது குறித்த கேள்விக்கு அதனை வலியுறுத்தி கேட்டு பெறுவோம் என்றார். மேலும் வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்றார். மோடி எனது நண்பர் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்


