“பாமக தலைவர் என்ற பெயரோடு யார் எதை சொன்னாலும் அதை கேட்க வேண்டாம்”- ராமதாஸ்

 
ராமதாஸ் ராமதாஸ்

பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Image

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது எனவும், நானே பாமகவுக்கு தலைவர் என்றும் ராமதாஸ் கூறிவருகிறார். இதனிடையே தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம்  என்ற பெயரில் 100 நாட்கள் நடைபெறவுள்ள அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார்.

ராமதாஸ்


இந்நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “யார் என்ன நடைபயணம் போனாலும் எந்தப் பயனும் இல்லை. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது. பாமகவில் ஒரே தலைமை தான். பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது. கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும், மக்களும் ஏற்க மாட்டார்கள். பாமக தலைவர் என்ற பெயரோடு யார் எதை சொன்னாலும் அதை கேட்க வேண்டாம்” எனக் கூறினார்.