கூட்டணி குறித்து டிச.30 ஆம் தேதி அறிவிப்பு- ராமதாஸ்

 
ramadoss ramadoss

கூட்டணி குறித்து டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கௌரவ தலைவர் ஜி.கே.மணி. பொதுச் செயலாளர் முரளி சங்கர். செயல் தலைவர் ஸ்ரீகாந்தி. மாநில வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி. மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன். சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரரும், இணைப்பொது செயலாளருமான அருள், தலைமைநிலை செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் என முன்னுருக்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், “இங்குவந்துள்ளவர்கள் தான் பாமகவின் ஆலமர வேர்கள் தூண்கள். பாமக இளைஞர் சங்க தலைவர் தமிழ்க்குமரன்(ஜி.கே.மணியின் மகன்) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இருமாநில இளைஞர் சங்க தலைவர் ஆக செயல்படுவார். அவர் வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப்பெறப்போகிறார். தேர்தல் கூட்டணி குறித்து வரும் 30 ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைப்பெறும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும். டிசம்பர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரமாண்டமாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது. அது தொடர்பாக பேசக்கூடியுள்ளோம். 324 சமுதாய மக்களுக்கும் பயன் பெறும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.