“வயிறு எரிஞ்சு சொல்றேன், அன்புமணி அரசியல் வாழ்க்கை முடிய போகிறது”- ராமதாஸ் சாபம்
வயிறு எரிஞ்சு சொல்றேன், உன் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என மகன் அன்புமணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சாபமிட்டுள்ளார்.

கடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “நான் வயிறெரிந்து சொல்கிறேன். அன்புமணியின் அரசியல் வாழ்க்கை முடிய போகிறது. அன்புமணியின் பாமக தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அன்புமணியால் பணம் கொடுத்துதான் கூட்டத்தை கூட்ட முடியும். நான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி நடக்கிறது. கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான். என்னுடைய உயிரைதான் அன்புமணி பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்துவிட்டார்.
தேர்தல் ஆணையம் வரை பணம் போய்விட்டது. கூட இருந்தவர்களை விலைக்கு வாங்கியதுபோல, தேர்தல் ஆணையத்தையே இப்போது அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். தேர்தல் ஆணையத்திடம் உண்மையை சொன்னாலும் ஏற்க மறுக்கிறது, ஏனென்றால் பணம் தேர்தல் ஆணையம் வரை போய்விட்டது. என் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. நான் செய்த தவறுகள், உன்னை படிக்க வைத்தது, மருத்துவராக்கியது. ஆனால் இப்போது நீ என்னோடு மோத நினைக்கிறார். அது உன்னால் முடியாது. தேர்தல் ஆணையத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். இங்கு நீதி, நியாயம் தான் வெற்றி பெறும்” என்றார்.


