"ஆராரோ ஆரிராரோ"- குழந்தையை மடியில் வைத்து தாலாட்டி பாட்டு பாடிய ராமதாஸ்

 
ச் ச்

கடலூரில் இரட்டை குழந்தைகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாலாட்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கடலூர் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று இரவு கடலூருக்கு வருகை தந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ராமாபுரம் பகுதியில் கட்சியின் மூத்த நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பிறகு கடலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டிற்கு சென்ற அவர் சமீபத்தில் அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கையில் வாங்கி பார்த்தார். பின்னர் அந்த குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு ஆராரோ ஆரிரோ என தாலாட்டு பாடல் பாட துவங்கினார்.



உன் குழந்தை தூங்கிவிட்டது என சொல்லி அவர்களிடம் குழந்தைகளை கொடுத்தார். அனைவரும் டாக்டர் ராமதாஸ் பாடிய தாலாட்டு பாடலை ரசித்து பார்த்தனர். மேலும் இன்று நடந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு போக போக தெரியும் என்று கூறினார்.