மாநாட்டுக்கு வரும் போது விபத்தில் சிக்கி விஜய் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது- ராமதாஸ்

 
ச் ச்

மாநாட்டுக்கு வரும் போது விபத்தில் சிக்கி  பாட்டாளி விஜய் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாமல்லபுரத்தில் நடைபெற்ற  சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வரும் போது  சீர்காழி  அருகே  நிகழ்ந்த விபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பாட்டாளி உயிரிழந்தார்;  முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.   விஜயை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த  முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேரும் விரைவில் முழுமையாக உடல் நலம் தேறி  வீடு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.