“பாமகவின் பொருளாளராக நானே தொடர்கிறேன்! அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்” - திலகபாமா

 
ச் ச்

பாமகவின் பொருளாளராக நானே உள்ளேன் என திலகபாமா கூறியுள்ளார்.

பாமக யாருடன் கூட்டணி? முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு கூட இல்லையா?  திரியை கொளுத்தும் திலகபாமா! | Thilagabama explain, Who is the alliance with  Pmk? Doesn't ...

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை, குடும்ப விவகாரங்களை வெளிப்படையாக முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கிவருகிறார் ராமதாஸ். அந்த வகையில் முதலில் பாமகவின் பொருளாளர் திலகபாமாவை பொறுப்பிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசேன் நியமிக்கப்படுவதாகவும் கூறினார்.


ஆனால் அதனை ஏற்க மறுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும்  அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாமக பொதுக்குழு என்னை தலைவராக முறைப்படி தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாமகவில் நிர்வாகிகளை நியமிக்க, நீக்க தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது” என்றார்.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திலகபாமா , “பாமகவின் பொருளாளராக தொடர்ந்து நானே செயல்படுவேன். பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி என்னை பொருளாளராக நியமித்துள்ளார். கட்சித் தலைவர் அன்புமணியின் தலைமையின் கீழ் அனைவரும் செயல்பட உறுதியாக உள்ளோம்.  கட்சி பொறுப்பு போவது, வருவது பற்றி எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து உறுப்பினராக செயல்படுவேன்” என்றார்.