திமுகவின் பேனரை கிழித்து தூக்கி எறிந்த பாமக தொண்டர்கள்! கிருஷ்ணகிரியில் வன்முறை வெறியாட்டம்

 
s

கிருஷ்ணகிரி அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேருந்து நிலையத்தில் வைக்கப்படிருந்த திமுக பேனரை கிழித்து வீசிய பாமகவினரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிட்டினத்தில் கடந்த வாரம் அங்காளம்மன் கோவில் மாயன கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது திருவிழாவை காண வீரப்பனின் படம் பொறித்த டி- ஷர்ட் அணிந்து வந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் மகேந்திரன் என்பவரின் மகன் ஆகாஷ் உள்ளிட்ட அவருடைய நணபர்கள் கும்பலாக சேர்ந்து பட்டா கத்தியிடன் வலம் வந்து இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த கும்பல் பட்டா கத்தியுடன் கையில் வாளை ஏந்தி திருவிழாவை காண வந்த பொதுமக்களை அச்சுறுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் (24) உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து பாமக மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமையில் திமுக அரசை கண்டித்து காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையதில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆர்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த பேருந்து நிலையம் கட்டிடத்தின் மீது ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக.,வினர் பேனரை கிழித்து வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தற்போது பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் திமுக.,வினர் பேனரை கிழித்து அகற்றிய விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.