பிரதமர் வருகை - தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஆலோசனை

 
TNGOVT

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Image

6-வது கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ 2023, தமிழ்நாட்டில்‌ சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில்‌ வரும்‌ ஜனவரி 19 முதல்‌ 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ மொத்தம்‌ 36 மாநிலங்கள்‌ மற்றும்‌ யூனியன்‌ பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில்‌ சுமார்‌ 6000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்‌, வீராங்கனைகளும்‌ 1600-க்கும்‌ மேற்பட்ட பயிற்சியாளர்களும்‌ பங்கேற்க உள்ளனர்‌. மேலும்‌, 1000-க்கும்‌ மேற்பட்ட நடுவர்கள்‌ மற்றும்‌ 1200-க்கும்‌ மேற்பட்ட தன்னார்வலர்கள்‌ ஈடுபடுத்தப்பட உள்ளனர்‌. 

Image

இந்நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக நாளை பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை மேற்கொள்கிறார். இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது.