பெரியார் பல்கலக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் - காவல்துறை முறையீடு

 
high court

சேலம் பெரியார் பல்கலக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கில் காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எஸ்சி/எஸ்டி  பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். 

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கில் காவல்துறை முறையீடு செய்துள்ளது. அவரது ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் காவல்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜாமினை ரத்து செய்ய கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஜனவரி 19ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.