அதிமுக வியூக வகுப்பாளர்களை நள்ளிரவில் கைது செய்த போலீஸ்

 
ச் ச்

சென்னை அதிமுக வியூக வகுப்பாளர்களான ஹரி மற்றும் சாய் ஆகியோரை அரும்பாக்கம் காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்து, துன்புறுத்துவதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக தகவல் அறிந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தியாகேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழில்அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு விலையுயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 10 கிராம் ஓஜி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 27.5 லட்சம், சொகுசு கார், 8 செல்போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கைதான 3 பேரும் வெவ்வேறு நபர்களுக்கு ஓஜி கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைதான 3 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திருமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட. ரூ. 27.5 லட்சம் பணம் சர்பூதினிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிமுகவில் வியூக அமைப்பாளரான ஹரி என்பவருடையது என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து போலீசார்  அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மைப் பணியாற்றும் பிரமன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரை அலுவலகத்திற்குள் சென்று கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், நேற்று இரவு நள்ளிரவில் திடீரென ஹரி மற்றும் சாய் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என்றும், பல காவல் நிலையங்களுக்கு நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாய், சபரிமலைக்கு மாலை அணிந்திருப்பதாகவும், அவருக்குக் குளிக்கவோ, சாமி கும்பிடவோ கூட அனுமதிக்கவில்லை என்றும் பாலமுருகன் வேதனை தெரிவித்தார். 

இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், திமுக அரசின் தூண்டுதலின் பேரிலேயே காவல்துறை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திமுக அரசின் இந்தச் செயலைக் வன்மையாக கண்டிப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னால், அதிமுகவின் தேர்தல் வியூகங்களைத் தடுக்கும் நோக்கம் இருப்பதாக  குற்றம் சாட்டியுள்ளார்