லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி

 
leo

லியோ வெற்றிவிழாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

leo

லியோ திரைப்பட குழு  நவம்பர் 1-ஆம் தேதி வெற்றி கொண்டாட்டத்திற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டு  தயாரிப்பு நிறுவனம் பெரியமேடு காவல் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி  மனு அளித்தது. மனு குறித்து காவல்துறை அனுப்பிய பதில் கடிதத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும், எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய விருந்தினர்களின் தகவல்கள்  யார் யார் எல்லாம் பங்கேற்க  உள்ளார்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில்  நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 200, 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

leo

 போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  அத்துடன் அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் . நேரு விளையாட்டு அரங்கில் உள்ள இருக்கைகளுக்கு ஏற்றவாறு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் .லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.