ஜெகன் மூர்த்தியை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனை
காதல் திருமணம் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் புரட்சி பாரதக் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியார் கர்நாடகா ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உட்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கும் சம்பவத்தில், தனுஷின் 17 வயது தம்பியை ஏடிஜிபி ஒருவரின் காரில் கடத்திச் சென்றதாக பெண் விட்டாரின் தரப்பில் ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்தனர். இதில் புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியாருக்கு தொடர்பு இருப்பதாக கூறி நேற்று அவரது வீட்டின் முன்பு இருநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடன் அவரை கைது செய்ய திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் காவல் துறையினர் திரும்பிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் அண்டை மாநிலங்களான கர்நாடகா பெங்களூரூ ஆந்திராவிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் தமிழக எல்லைகளான ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணி அருகே பொன்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 15 ஆய்வாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விடிய விடிய வாகன சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் அருகே வெங்கத்தூர் பகுதியில் ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை செய்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.


