திருமலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை..!

 
1 1

 திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இதற்காகத் திருப்பதி மலை அடிவாரத்தில் தொடங்கி திருமலை வரை பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் பதிவாகும் காட்சிகளை, இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்ப முடியுமாம்.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு, விரைவான சாமி தரிசன ஏற்பாடு உள்ளிட்டவைகளை உறுதி செய்ய முடியும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏஐ தொழில் நுட்ப காவல் கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார்.