பிரச்சார வீடியோக்களை ஒப்படைக்க நிர்மல் குமாருக்கு காவல்துறை நோட்டீஸ்
Oct 1, 2025, 16:30 IST1759316416618
விஜயின் கரூர் பிரச்சார வீடியோக்களை அளிக்க சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமாருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விஜய் தனி கேமிராமேன் எடுத்த காட்சிகள், பிரச்சார பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் கரூர் போலீசார் கேட்டுள்ளனர். சென்னை சேலையூரில் உள்ள இல்லத்திற்கு சென்ற போலீசார், நிர்மல்குமாரின் உதவியாளரிடம் நோட்டீஸை வழங்கி சென்றதாக கூறப்படுகிறது.


