செங்கோட்டையன் வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! களமிறங்கிய வட இந்திய பவுன்சர்கள்
Dec 2, 2025, 19:25 IST1764683733520
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது.

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அவினாசி அத்திகடவு திட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அதிமுகவில் கோஷ்டி பூசல் வெளிப்படையானது. அதைத்தொடர்ந்து குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை அடுத்து, செங்கோட்டையன் வீட்டிற்கு போடப்பட்ட ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது. புதியதாக 2 வட இந்திய பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


