காய்கறி வியாபாரியை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

 
ச் ச்

காய்கறி வியாபாரியை கத்தியால் வெட்டிய  பிரபல ரவுடியை பிடிக்க சென்ற காவலரை ரவுடி கத்தியால் வெட்டியதால் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுபாஸ்கர் ரமேஷ் கடை முன்பு பைக்கை நிறுத்தி உள்ளார் அப்பொழுது ரமேஷ் இங்கு வண்டியை நிறுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார் இந்த நிலையில் இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது அப்பொழுது சுபாஸ்கர்  வண்டியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷ்  தலை மற்றும் கையில் சரம்மாரியாக தாக்கியுள்ளார் இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார் சுபாஷ்கர் தப்பிச் சென்றுள்ளார் பின்னர் அருகில் இருந்தவர்கள் ரமேஷ் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து பின்னர் மேல்சித்துக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சுபாஷ்கரை தேடி வந்தனர் இன்று சுபாஸ்கர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக நெய்வேலி தெர்மல் போலீசாருக்கும் மற்றும் தனிப்படை பிரிவுக்கும் தகவல் கிடைத்தது அதன் பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர் அப்பொழுது சுபாஸ்கர் போலீசாரை பார்த்தவுடன் அவர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பிடிக்க சென்ற வைத்தியலிங்கம், வெங்கடாசலத்தை கத்தியால் வெட்டி உள்ளார் அப்பொழுது ஆய்வாளர் விஜயகுமார் ரவுடி சுபாஸ்கரிடம் சரண் அடைந்து விடு என்று கூறியுள்ளார் அப்பொழுது சுபாஸ்கர் கத்தியை எடுத்து விஜயகுமாரை தாக்க முயற்சிக்கும் பொழுது விஜயகுமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரது வலது முட்டிக்காலுக்கு கீழ் சுட்டுள்ளார் அப்பொழுது அங்கிருந்த மற்ற போலீசார் ரவுடியை பிடித்து நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காயம் பட்ட இரண்டு போலீசாரையும் மீட்டு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தனர் இதனை அறிந்தார் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு காவலர்களிடம் உடல் நலம் குறித்து விசாரணை செய்தார் பின்னர் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை பார்வையிட்டார்.