மோசடி வழக்கு : ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை..

 
முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு!


ரூ. 3 கோடி மோசடி புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.  பதவியில் இருந்த காலக்கட்டத்தில் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 3 கோடி வரையில் பணம் பெற்றுக்கொண்டு  மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர்.

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்க என்ன குமாரசாமியா? இனி திமுகவுக்கு சாவுமணி தான்… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்த வழக்கில் கைதாவதைத் தவிர்க்க ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து  அவர் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின.   முன் ஜாமீன் தள்ளுபடியானதால் இராஜேந்திர பாலாஜியை,  விருதுநகர்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 தனிப்படைகள்  அமைத்து  தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்துல் மேல்முறையீடு செய்துள்ளார்.

2013ஆம் ஆண்டு லஞ்ச வழக்கு – ராஜேந்திர பாலாஜியை அலறவிடும் உயர் நீதிமன்றம்!

இந்நிலையில்   ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கு   விசாரணையை தனிப்படை தீவிரப்படுத்தி உள்ளது.  aவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பெங்களூருவில் உறவினர் வீட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த தகவலை உறுதி செய்த   தனிப்படை போலீசார் அவரை பிடிக்க பெங்களூர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.