இன்ஸ்பெக்டர் வீட்டில் கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்காரர்

 
s s

கோவையில் இளம் பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ் காவலரை, மதுக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மாதவ் கண்ணன் (29). இவர் பொள்ளாச்சி காவல் நிலைத்தில் ஆய்வாளரின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும் இவரை காவல் ஆய்வாளர் குடும்ப உறுப்பினர் போல பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல் ஆய்வாளரின் வீடு மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள நிலையில் மாதவ் கண்ணன் தங்க தனியாக அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பணியின் காரணமாக காவல் ஆய்வாளர் அடிக்கடி வெளியே செல்வதால் தனது மகளை பார்த்துக் கொள்ள பெண் உறவினர் ஒருவரை வீட்டிற்கு ஆய்வாளர்  வரவழைத்துள்ளார். அவருடன் அந்த பெண் உறவினரின் 19 வயது மகளும் வந்து தங்கியிருந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளர் பணிக்காக வெளியே சென்றிருந்த நிலையில்,  ஆய்வாளரின் வீட்டில் கார் ஓட்டுநர் மாவத் கண்ணன் குடும்ப உறுப்பினர்களோடு  தங்கியிருந்தார். அப்போது இரவு 10.30 மணியளவில் காவல் ஆய்வாளரின் உறவினர் பெண்ணின் மகள் உடை மாற்ற கழிவறைக்கு சென்றாத தெரிகிறது. அப்போது மாதவ் கண்ணன் தனது அறையில் இருந்த கழிவறை ஜன்னல் வழியாக பெண் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட இளம் பெண் சத்தம் போடவே, குடும்ப உறுப்பினர் ஓடி வந்துள்ளனர். பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் மாதவ் கண்ணன் கதவை திறக்காத நிலையில், வீட்டில் இருந்தவர்கள் ஆய்வாளருக்கு அழைத்து தகவலை கூறியுள்ளனர். 

இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் மதுக்கரை போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அறையில் இருந்த மாதவ் கண்ணனை பிடித்து போலீசார்  விசாரித்த போது செல்போனில் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆய்வாளர் அளித்த புகார் அடிப்படையில் மதுக்கரை போலீசார் மாதவ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 6 ம் தேதி வரை மாதவ் கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவலரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.