காவலர் படுகொலை- குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

 
ச்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக நாவார்பட்டி அருகே ஹரிஹரன் என்பவரது தோட்டத்தில் வைத்து காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். காவலருடன் வந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  காவலரை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் மதுரை மண்டல ஐ.ஜி வந்திதா பாண்டே,  திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா  மதுரை - தேனி மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் 100 போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கம்பம் நகரில் கம்பம் தமிழ்நாடு கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய கம்பமெட்டு சாலையில் அடிவாரப் பகுதியில் மாந்தோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலில் அடிப்படையில் குற்றவாளிகள் பதுங்கி இருந்த இடத்தில் புகுந்த தனிப்பிரிவு போலீசார், அவர்களை சுற்றி வளைத்த போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தள்ளிவிட்டு போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். தப்பி ஓடியவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் காயம் அடைத்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்களின் ஒருவர் பெயர் பொன்வண்ணன். இவர் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது. காயமடைந்த மேலும் இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் கொலை வழக்கில் குற்றவாளிகள் கம்பம் நகரில் பதுங்கி இருந்து அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.