பாலிமர் செய்தியாளர் விபத்தில் மரணம் - நிதியுதவி அறிவிப்பு

 
stalin stalin

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் திரு.முத்துக்குமார் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

tn

சாலை விபத்தில் உயிரிழந்த திரு. முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.