பாலிமர் செய்தியாளர் முத்துக்குமார் மறைவு - தினகரன் இரங்கல்!

 
ttv ttv

பாலிமர்  செய்தியாளர் முத்துக்குமார் மறைவுக்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

accident

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிமர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. 

tn

 30 ஆண்டுகளுக்கும் மேல் செய்தியாளராக பணியாற்றி வந்த திரு.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக செய்தியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.