திருமாவளவன் பிறந்தநாள் - சசிகலா, ஓபிஎஸ் வாழ்த்து

 
tn

திருமாவளவன் பிறந்தநாளையொட்டி  அரசியல் கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

thiruma

இதுதொடர்பாக சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 61-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில்,  நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.என்று பதிவிட்டுள்ளார்.



அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், " விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அன்புத் தம்பி தொல். திருமாவளவன், M.P., திருமாவளவன்   அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  அவர் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து நாட்டுக்கு சேவைபுரிந்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.