கேரளாவில் இறங்கிய பொள்ளாச்சி பலூன்! பலூனில் பயணித்த 3 பேர் பதைபதைப்பு

 
பலூன் பலூன்

பொள்ளாச்சியில்  நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பொள்ளாச்சியில் நேற்று முன் தினம் துவங்கி 3 மூன்று நாட்களுக்கு சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. பத்தாவது முறையாக நடைபெறும் இந்த திருவிழாவை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டுக்களிக்கின்றனர். மூன்றாம் நாளான இன்றுடன் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நிறைவடைகிறது. காற்றின் திசையில் பயணிக்க கூடிய பிரம்மாண்ட ராட்சத பலூன் பொள்ளாச்சியில் பறக்க துவங்கி கேரளாவில் தரையிறங்கியது. இன்று காலை வழக்கம் போல பிரம்மாண்ட ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன.


இன்று காலை தமிழ்நாடு மாநிலம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா பகுதியில் இருந்து கிளம்பிய கேமரூன் என்ற ராட்சத பலூன் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டன் சேரி என்ற கிராமத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய பலூன்களில் இருந்து கேஸ் கண்டெய்னர்கள் உள்ளிட்டவை பத்திரமாக எடுத்து வரப்பட்டன. தரை இறங்கிய பலூனை ,பலூன் குழுவினர் மீண்டும் எடுத்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரண்டு சிறுமிகளுடன் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ராட்சத பலூன் கேரளாவில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 நபர்களுடன் சென்ற பலூன் பாலக்காடு பத்தான்சேரி பகுதியில் இறங்கியது. பலூனில் பயணித்தவர்கள் மீட்கப்பட்டனர்.