திமுகவில் இணைந்தேனா?- பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு விளக்கம்

 
Pollachi jayaraman Pollachi jayaraman

பொள்ளாச்சியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஜெயராமன் திமுகவில் இணைந்ததாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

pollachi jayaraman

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் காலத்திலிருந்து தான் அதிமுகவில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்,அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் தொண்டராக தொடர்ந்து அதிமுகவில் பணியாற்றுவதாகவும்,பிரபல ஊடகம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மகனை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக அந்த ஊடகம் மீது மான நஷ்ட வழக்கு போட்டு இருப்பதால்,திமுகவில் இணைந்ததாக வதந்தி அந்த ஊடகத்தில் வெளியாகி உள்ளது எனவும், இதைத்தொடர்ந்து மற்ற ஊடகங்களும் அதனை பரப்ப துவங்கி உள்ளதாகவும், குற்றம் சாட்டினார்.

மேலும் அதிமுக தன் உயிரோடு உணர்வோடும் கலந்தது என்றும்,உயிர் உள்ளவரை தான் அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பேன் என்றும், இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். வேண்டுமென்றால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுகவில் இணைவதற்காக மனு கொடுத்தால், எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து பரிசீலனை செய்வார் எனவும்,இது திட்டமிட்ட சதி எனவும், தேர்தல் நேரத்தில் திமுகவினர் தொடர்ந்து தன் மேல் அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டும் தற்போது 2026 ஆம் ஆண்டும் தேர்தல் நேரத்தில் தொடர்ந்து திமுக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதிமுகவை யாரும் அசைக்க முடியாது எனவும், தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக தேர்தலில் இணையுமா என்ற பத்திரிக்கையாளர் கேள்விக்கு, கட்சி தலைமை பதில் கூறும் என தெரிவித்தார்.