தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்..!

 
1

நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மோதிய போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது."ஐபிஎல் வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு, அவரது போட்டி ஊதியத்தில் 15% அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரில் கைரன் பொல்லார்டு நான்காவது நடுவரை நோக்கி ஆபாசமாகத் திட்டினார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.நடுவர் பங்கஜ் தர்மாணி விதித்த இந்த அபராதத்தை பொல்லார்டு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக பொல்லார்டு விளையாடும்போதும் பலமுறை அபராதம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.