பொங்கல் பண்டிகை - நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

 
train train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. முன்கூட்டியே  முன் பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

pongal

வருகிற ஜனவரி 11ஆம் தேதி பயணம் மேற்கொள்ள நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிற ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 14ஆம் தேதியும் , ஜனவரி 13ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 16ஆம் தேதியும் ,  ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 17ஆம் தேதியும்,  ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  அதேபோல் ஜனவரி 17ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

train

IRCTC இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஜன. 11 முதல் 17-ம் தேதி வரை பயணம் செய்ய, செப்.13 முதல் 19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.