ஜன. 10ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு பெறலாம்

 
pongal

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு  மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய்  ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

tn

அத்துடன் பொங்கல் நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் ஜன.10 ஆம் தேதி முதல் ஜன.13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்; ஜன.13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள், ஜன.14ஆம் தேதி பெறலாம் நாளை முதல் ஜன.9 ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புக்கான டோக்கன், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படவுள்ளது.