பொங்கல் பரிசுத் தொகை - விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

 
ration

தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். 

ration

இந்த தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி ,திராட்சை, ஏலக்காய் , பாசிப்பருப்பு ,நெய் ஆகிய பொருட்களுடன் சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு ,சீரகம், மிளகு ,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை ,கோதுமை மாவு ,உப்பு ஆகிய பொருட்களுடன்,  ஒரு துணி பையும் அளிக்கப்படுகிறது.  இதன் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்றும் இந்த தொகுப்புடன் சேர்த்து ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதேபோல் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ration shop

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.  அதேபோல் திமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்பேற்று முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல்  தொகுப்புடன் , பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவதாக இருந்தால் அதை ரேஷன் கார்டுதாரர்கள் வங்கிக் கணக்கு மூலம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் அமைதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.