சென்னை திரும்பும் மக்கள்- போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சிரமம்
பொங்கல் பண்டிகையை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் பொதுமக்கள் போதியளவில் பேருந்துகள் இயக்கபடாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஓரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் படையெடுக்க தொடங்கினர். மேலும் இன்று பொங்கல் பண்டிகையை விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல காலை முதலே பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியதால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் செல்ல அனைத்து பேருந்துகளிலும் பொதுமக்கள் ஓருவருக்கொருவர் முண்டியத்து கொண்டு ஆபத்தான முறையில் பேருந்தை ஏறி வருகின்றனர். நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஆரணியிலிருந்து சென்னைக்கு வழக்கம் போல் 31 பேருந்துகள் 2முறை ஆரணி சென்னை இயக்கபடுவதாகவும் தற்போது 92 முறையும் கூடுதல் பேருந்துகள் 10 உள்ளிட்ட 6முறையும் இயக்கபட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழகம் துறையினர் கூறினர். ஆனாலும் போதிய பேருந்துகள் இயக்கபடாததால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலையும் பேருந்துகளில் ஓருவருக்கொருவர் முண்யடித்து சென்று ஏறும் அவலமும் ஏற்பட்டுள்ளன.


