"தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் பொங்கல், #INDIA முழுவதும் பொங்கட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் #பொங்கல் - ஈகைப் பொங்கல் - #சமத்துவப்பொங்கல், இந்த ஆண்டு #INDIA முழுவதும் பொங்கட்டும்!

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கலோ பொங்கல்! " என்று குறிப்பிட்டுள்ளார்.