பொன்முடி வழக்கு - ஜன.2ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

 
tn

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி.

Ponmudi

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹50 லட்சம் அபராதம் விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்  தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவர் இழந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். அதேசமயம் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

supreme court

இந்நிலையில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, ஜன.2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைத்ததும், மூத்த வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஜன.2ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.