உதயநிதியின் பரப்புரையே விக்கரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்- பொன்முடி
அமைச்சர் உதயநிதியின் பரப்புரையும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திமுகவின் வெற்றி வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல் படுதோல்வியில் அடைந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. இருப்பினும் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி அன்னியூர் சிவாவிற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அமைச்சர் உதயநிதியின் பரப்புரையும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம். திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி” என்றார்.