"ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி"- பொன்முடி

 
 அமைச்சர் பொன்முடி..  அமைச்சர் பொன்முடி..

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய அடி என்றும் மக்களாட்சி கூட்டாட்சி கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பொன்முடி, மகன்கள் மார்ச் 19-ம் தேதி ஆஜராக சம்மன்: சிபிஐ நீதிமன்றம்  உத்தரவு | Minister Ponmudi, sons summoned to appear on March 19 -  hindutamil.in


விழுப்புரம் அருகேயுள்ள ஏனாதிமங்கலத்தில் பகுதி நேர நியாய விலைக்கடையினை முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். நியாய விலைக்கடையினை திறப்பினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, மிகச்சிறப்பான வெற்றி கிடைத்துள்ளதாகவும், தமிழக முதல்வருக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும்,கூட்டாட்சி தத்துவதத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார். ஆளுநருடைய அதிகாரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் மூலம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்தியுள்ளது. அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்பதை யாரும் மறுக்க முடியாது கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். 

குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது என தெளிவாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டதை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இதில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்களாட்சி தத்துவத்தை காப்பாற்றுவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய அடி பாஜக இல்லாத மாநிலங்களை ஆட்டி படைக்க பாஜக நினைத்தார்கள் ஆளுநர்களை கைப்பாவையாக வைத்து கொண்டு வங்காளதேசம், கர்நாடாகா, கேரளா போன்ற மாநிலங்களை ஆட்டி அடைக்க நினைத்தார்கள். அனைத்து ஆளுநர்களுக்கு கிடைத்த கட்டுபாடு என தெரிவித்தார். பாஜக அரசியல் செய்கிறார்கள், கோவைக்கு வந்த மோடி என்னமோ சொல்லிட்டி செல்கிறார். கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் விளக்கம் கேட்டு இருக்கலாம், ஆனால் அதனை செய்யாமல் நிராகரிப்பது என்பது அரசியலுக்காக செய்யப்படும். சூழ்ச்சி ஒட்டு மொத்தமாக நிராகரிப்பது என்பது பாஜக செய்கிற அரசியல் தமிழக மக்கள் என்றால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பாஜக நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்.