அதிமுக சுக்குநூறாக உடைந்தது என்பதற்கு செங்கோட்டையன் நிகழ்வு ஒரு சான்று - பொன்முடி
அதிமுக சுக்குநூறாக உடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இன்றைய செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒரு சான்று என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் 661 மாணவிகளுக்கு ரூபாய் 31 லட்சத்து 46 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்கின்ற காலம் மாறி தற்போது தமிழகத்தில் அதிகப்படியான பெண்கள் படித்து வருகின்றனர். இந்த முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்கள் தான் அடித்தளம் அந்த வகையில், தமிழகத்தில் சுகாதாரமும், கல்வியும் தனது இரண்டு கண்களாக பாவித்து கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருபவர் தமிழக முதல்வர் என சூலூரைத்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையின் தவெக செல்ல இருப்பதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, அதிமுக சுக்குநூறாக உடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இன்றைய செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒரு சான்று என கூறினார்.


