#Ponmudi மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி!

 
Ponmudi
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு தண்டனையை நிறுத்தி வைத்து சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து பொன் முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது தவிர பொன்முடி குற்றமற்றவர் என கூறவில்லை எனக் கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து இருந்தார் தமிழக ஆளுநர் R.N.இரவி.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்க வேண்டியது வரும் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.
Ponmudi
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியானது.
Governor
ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்