“அப்பாவுக்கு சிலை திறந்ததை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்”... மு.க.ஸ்டாலின் செயலால் நெகிழ்ந்த பொன்னப்ப நாடார் குடும்பத்தினர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், சுதந்திரப் போராட்ட தியாகி குமரிக் கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை தந்தார். மதியம் கன்னியாகுமரி குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு 7:00 மணிக்கு நாகர்கோவில் வேப்ப மூடு ஜங்ஷன் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் உன்னப்ப நாடாரின் சிலையை திறந்து வைப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் கட்சியினர் தொண்டர்கள் ஏராளமான மக்கள் குவிந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் சார்பிலும் புத்தகங்கள் பூங்கொத்துகள் கொடுத்து முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதன்பின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் சிலையை திறந்து வைத்தார். அடுத்த கட்டமாக அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொன்னப்ப நாடார் குடும்பத்தினர் பங்கேற்று இருந்த நிலையில் அவர்களோடு முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும் உயிருள்ளவரை மறக்க மாட்டோம் என பொன்னப்ப நாடாரின் மூத்த மகன் உருக்கமாக பேட்டியளித்தார். அதன் பின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார்.

