ஆபாசமாக பேசி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரபல யூடியூபருக்கு தர்ம அடி

 
ச் ச்

ஆபாசமாக பேசி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு என்ற யூடியூபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay tvk crime

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் விஷ்ணு. இவர் தனது யூட்யூப் சேனலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் விஷ்ணுவை சில இளைஞர்கள் சேர்ந்து புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆபாசமாக பேசி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு என்ற யூடியூபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டுள்ளது.

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வீட்டிற்கே சென்றுள்ளார் யூடியூபர் விஷ்ணு. விஷ்ணுவின் வருகைக்காக காத்திருந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் அவரை புரட்டி எடுத்துள்ளனர். அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி யூடியூபர் விஷ்ணுவை தாக்கிய வீடியோ இணையத்தில் வலம்வருகிறது. திருமணம் ஆகி மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இவ்வாறு செயல்படலாமா என்றும் கேள்வி எழுப்பி விஷ்ணு மீது தாக்குதல் நடத்தபட்டது. வீடியோ இணையத்தில் வலம் வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.