பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு!!

 
Ponmudi

ஜூலை 2ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.  பொறியியல் தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். 22.92 லட்சம் விண்ணப்பங்களில் ,  1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

Ponmudi

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  ஜூலை இரண்டாம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால் பொறியியல் கலந்தாய்வு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.  நீட் தேர்வு முடிவுகள் வெளியானாலும் கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை.  மருத்துவத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் பொறியியலில் சேர்ந்து பின் விலகுவது அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே மருத்துவ கலந்தாய்வு முதல் கட்டம் தொடங்கிய பின்,  பொறியியல் கலந்தாய்வு தொடங்கலாம் என ஆலோசிக்கிறோம். 

Ponmudi

திருச்செந்தூர் மாணவி நேத்ரா கட் ஆப்பில் முதலிடம் பெற்றுள்ளார் . தரவரிசை பட்டியல் 102 பேர் 200க்கு 200 பெற்றுள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றார்.