வேலையை உதறிவிட்டு தவெக மாநாட்டுக்கு வரணுமா? புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு
வேலையை உதறிவிட்டு மாநாட்டிற்கு கலந்து கொள்ள வேண்டும் என கூறிவரும் தமிழக வெற்றி கழக செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கருத்தை திரும்ப பெற வேண்டும், இல்லையேல் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் எதிர்வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக மாநிலமெங்கும் இக் கட்சியின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டங்களில் பேசி வரும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் அன்று விடுப்பு எடுத்து வரவேண்டும். விடுப்பு எடுக்க முடியாதவர்கள் வேலையை விட்டு விடலாம் என்ற வகையில் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
இந்த கருத்தை தமிழக வெற்றி கழகம் திரும்ப பெற வேண்டும், இல்லையேல் இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும் என கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . இது கும்பகோணம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


