பெரம்பலூரில் விஜய்யை கண்டித்து போஸ்டர்
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் இன்று திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய நான்கு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10:30 மணிக்கு பிரச்சாரம் திருச்சியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மதியம் 3 மணிக்கு தான் பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு வந்தார். பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து அவர் இரண்டாவது இடமான அரியலூர் பகுதியில் இரவு 9 மணிக்கு தான் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடமான குன்னம் பகுதிக்கு வருகை தந்து அவர் பேசுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 9.30 மணிக்கு குன்னம் வந்த விஜய் அவர், வந்த பிரச்சார பேருந்தின் மீது ஏறி ரசிகர்களுக்கு கை அசைத்து விட்டு மீண்டும் பேருந்துக்குள் சென்று விட்டார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவர் குன்னம் பகுதியில் உரையாற்றுவார் என காத்திருந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பெரம்பலூர் மக்கள், விஜய்யை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “அரசியல் கட்சி ஒன்றும் சனிக்கிழமை வேலை இல்லை. அது 24 மணிநேர வேலை. அரசியல் வார விடுமுறை ட்ரிப் இல்லை. ஃபுல் டைம் ஜாப், அரசியல் என்றால் வார கடைசியில் வெளியாகும் படம் என நினைக்கிறீரார்கள்” என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.


