திமுக - அதிமுகவினர் மோதல்...போலீஸ் தடியடி - மறைமுக தேர்தல் பல இடங்களில் ஒத்திவைப்பு!!

 
tn

கடந்த மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக 62வது இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று  நகராட்சித் தலைவர் ,துணைத்தலைவர் ,பேரூராட்சி தலைவர் ,துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பத்தூரின்  ஆம்பூர் உள்ளிட்ட ஊர்களில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் , பூந்தமல்லி ,பண்ருட்டி, வால்பாறை, திருமங்கலம், உசிலம்பட்டி, ஆம்பூர்  உள்ளிட்ட 11 ஊர்களில் நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

election

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கரூர் மாவட்டம் புலியூர், குற்றாலத்தில்  பேரூராட்சி தலைவருக்கான புலியூர், குற்றாலத்தில் மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.போதுமான உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

tn

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தலலில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் மீது கல்வீசி  தாக்கியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார்கலைத்தனர்.  அதேபோல் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.