கொட்டும் மழை- குற்றால அருவிகளில் குளிக்க தடை

 
குற்றாலம்  நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹேப்பி நியூஸ்: குற்றால அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் குளிக்க விதிக்கப்பட்ட தடை அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

 Waterfall | மீண்டும் களை கட்டிய திற்பரப்பு அருவி

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர் மழை நீடித்து பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது பேச்சுப் பாறை அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து இன்று காலையில் ஒரு பகுதியில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.