வரும் 11ம் தேதி மின்தடை; மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

 
power cut

பராமரிப்பு பணி காரணமாக வரும் 11ம் தேதி பொன்னேரியில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற்றப்பட்ட பிறகு, நிலைமை சீரானதும் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

power cut

இதனிடையில், மழை பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளை மின்வாரியம் துரிதப்படுத்தியுள்ளது. பராமரிப்பு பணியின் போது ஆங்காங்கே  மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதற்கான அறிவிப்பு மக்களுக்கு முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. அந்த வகையில் வரும் 11ஆம் தேதி பொன்னேரியில் மின் தடை செய்யப்படுக்கும் என உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொன்னேரி துரைநல்லூர் பகுதிகளான கவரப்பேட்டை ஆரணி கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.