#BREAKING : சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு..!

 
Q

பப்புவா நியூகினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. இதனால் 7 பேர் பலியாகினர்.

News Hub