"காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட்டு சேர்ந்து ஸ்டாலின் முதுகில் குத்துகிறது"

 
stalin

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட்டு சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சதி செயலுக்கு தள்ளி அவரை முதுகில் குத்துகிறது என்று பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார்.

mullai

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் சிங்கம்புணரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிபடக் கூறியுள்ளார்.  ஆனால் அணையை உடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது இது கடும் கண்டனத்துக்குரியது.  காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.  கூட்டாட்சி தத்துவத்தை முறியடிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது.  அத்துடன் முதல்வர் ஸ்டாலினை பழிவாங்க அக்கட்சி நினைத்து அவரது முதுகில் குத்த பார்க்கிறது" என்று விமர்சித்தார்.

tn
 
தொடர்ந்து பேசிய அவர், " 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க அனுமதிக்கமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு கூறுவது சட்டவிரோதமான செயல்.  முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவு 152 அடியாக உயர்த்தி தமிழகம் பாசனத்தை உறுதிப்படுத்துவதற்கும் , பேபி அணையைப் வலுப்படுத்துவதற்கு கேரள அரசு உதவ வேண்டும்.  கட்டுமான பொருட்களை கொண்டு செல்லவும் ,மின்சார, சாலை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கேரள அரசு முன்வர வேண்டும்.  அதேபோல் மத்திய தொழில் பாதுகாப்பு படை அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இதை வலியுறுத்தி வருகிற மார்ச் 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை மதுரையில் நடத்தவுள்ளோம்"என்று கூறினார்.