கோவையில் பயிற்சி மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை

 
Death

கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பெண் தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி விட்டு பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Ketamine: What Is It, uses, treatments, effects, and more effects

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த சந்தோஷ் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் தனக்கு வயிறு உபாதை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த செவிலியர்களிடம் கூறிய சந்தோஷ் அதற்காக மருந்து எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு, தனக்குத்தானே ஊசி மூலம் மருந்து செலுத்தி உள்ளார். பின்னர் தான் ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வு அறைக்குச் சென்று தூங்கி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சந்தோஷ் வெளியே வராததால் அங்கிருந்த சக மருத்துவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.  

Doctor commits suicide by injecting anesthesia, மயக்க ஊசி செலுத்தி பெண்  டாக்டர் தற்கொலை,

அப்போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சந்தோஷ், தனது பெண் தோழியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும்,  இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மற்றொரு தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி விட்டு அதிகளவு மயக்க மருந்து (அனஸ்தீசியா) எடுத்துக் கொண்டது தெரியவந்தது.  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.