பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு

 
tn

பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

tn

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ஃபிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நாரே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார். நாக் அவுட் உலகக்கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல்முறையாகும்.  இளம்வீரரான பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார்.

tn

இந்நிலையில் உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற வெள்ளி பதக்கத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழக அரசு வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.  உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.